உள்ளூர் செய்திகள்

விவசாயி மாயம்

திண்டிவனம்: திண்டிவனம் அருகே விவசாயி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். திண்டிவனத்தை அடுத்த ஊரல் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமால், 60; விவசாயி. கடந்த 23ம் தேதி, வீட்டிலிருந்து தனது விவசாய நிலத்திற்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால், போலீசில் புகாரளித்தனர். இது குறித்து, ரோஷணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !