மேலும் செய்திகள்
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
30-May-2025
விழுப்புரம்: குறைகேட்பு கூட்டம் நடத்தக்கோரி, விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிரில் விவசாய சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடக்கும். விழுப்புரம் மாவட்டத்தில் ஜமாபந்தி முகாம் நடப்பதால், வாராந்திர குறைகேட்பு கூட்டம், விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் திரண்டனர். பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் எதிரில் சென்று, காலை 10:45 மணிக்கு, சங்க தலைவர் கலிவரதன் தலைமையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படாததை கண்டித்தும், கூட்டத்தை நடத்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். தகவலறிந்த கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பிரேமலதா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜமாபந்தி நடப்பதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மாற்றுதேதி அறிவித்து கூட்டம் நடத்தப்படும் என கூறினர். இதையடுத்து, காலை 10:55 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.பின், பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் பகுதியில் திரண்டு, கலெக்டரை சந்தித்தால் மட்டுமே புறப்பட்டு செல்வதாக கூறி விவசாய சங்கத்தினர் நின்றிருந்தனர். ஆனால், கலெக்டர் வராததால் மாலை 3:55 மணிக்கு, விவசாய சங்கத்தினர் தாங்களாகவே அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் சம்பவத்தால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
30-May-2025