உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பத்திரப்பதிவு ஆபீசை மூடி விவசாயி போராட்டம்; திண்டிவனத்தில் பரபரப்பு

பத்திரப்பதிவு ஆபீசை மூடி விவசாயி போராட்டம்; திண்டிவனத்தில் பரபரப்பு

திண்டிவனம் : திண்டிவனம் பத்திரப் பதிவு அலுவலகத்தில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் தரவில்லை என்பதால், அலுவலகத்தின் கதவை மூடி விவசாயி தர்ணா போராட்டம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் தாலுகா, சிறுதலைப்பூண்டியை சேர்ந்தவர் வெங்கடேசன், 45; விவசாயி. இவரது தந்தையின் சொத்தை சிலர் தவறான தகவல்களை கூறி அவர்கள் பெயரில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.இது தொடர்பான தகவல்களை பெற, திண்டிவனம், சந்தைமேட்டிலுள்ள மாவட்ட பத்திரப்பதிவு அலுவுலகத்தில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்.டி.ஏ.,) விபரம் கேட்டு வெங்கடேசன் மனு அளித்தார். பதில் கிடைக்கவில்லை என்பதால், நேற்று பிற்பகல் 1.00 மணியளவில், வெங்கடேசன், அலுவலகத்திலிருந்த மாவட்ட பதிவாளரின் மேலாளர் அனிதாவிடம், விபரங்கள் கூறி, ஆர்.டி.ஏ.,வில் கேட்டுள்ளபடி பதில் தரும் ஆவணங்களை கேட்டார்.அனிதா, ஆர்.டி.ஏ., பதில் ரெடியாக உள்ளதாகவும், மாவட்ட பதிவாளர் இல்லை என்பதால் மறுநாள் காலை 10.00 மணிக்கு வந்து வாங்கி செல்லுமாறு கூறியுள்ளார்.வெங்கடேசன், இரவு 10.00 மணியானாலும், ஆர்.டி.ஏ. பதிலை கொடுத்தால் தான் இங்கிருந்து செல்வேன் என அடம்பிடித்து, அதிகாரியின் இருக்கை எதிரில் உட்கார்ந்து கொண்டார்.மாலை 4.45 மணியளவில் திடீரென வெங்கடசன், பத்திரப்பதிவு அலுவலகத்தின் கதவை மூடி தர்ணா போராட்டம் நடத்தினார். பத்து நிமிடத்திற்கு பிறகு அவரே கதவை திறந்துவிட்டார்.அங்கிருந்த சிலர் வெங்கடேசனிடம் பேசி, அடுத்த நாள் வந்து ஆர்.டி.ஏ., நகலை வாங்கி கொள்ளுமாறு மாலை 5.30 மணியளவில் அவரை அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை