உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விவசாய சங்க ஆர்ப்பாட்டம்

விவசாய சங்க ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள், விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் விழுப்புரத்தில் நடந்தது.நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் முருகன், ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு தாண்டவராயன், சகாபுதீன், விவசாயிகள் விடுதலை முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் அம்பேத்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில், குடிக்கும் தண்ணீருக்கும், விளை நிலத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !