உழவர் நல மையம் விண்ணப்பிக்க அழைப்பு
வானுார்: முதல்வரின் உழவர் நல மையம் அமைக்க பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வானுார் வேளாண்மை உதவி இயக்குநர் எத்திராஜ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு: நடப்பாண்டில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு முடித்த பட்டதாரிகள் சொந்தமாக வேளாண் சார்ந்த தொழில் துவங்க முதல்வரின் உழவர் நல மையம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் வங்கியில் ரூ.10 லட்சம் வரை கடன் பெற்று உழவர் நல மையம் அமைத்த பின்பு அரசு மானியமாக ரூ. 3 லட்சம் வங்கிக்கு செலுத்தப்படும். ஆர்வமுள்ளவர்கள் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.