உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் மீது கார் மோதல் தந்தை, மகன் உயிரிழப்பு

பைக் மீது கார் மோதல் தந்தை, மகன் உயிரிழப்பு

விக்கிரவாண்டி:சாலையை கடக்க முயன்ற பைக் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் பலியாகினர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த கொங்கராம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 54; தி.மு.க., கிளை செயலர். இவரது மகன் தயாநிதி, 23; சென்னை, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு ஏழுமலை, தயாநிதியுடன் பைக்கில் வி.சாலை பகுதியில் உள்ள பைபாஸ் சாலையை கடக்க முயன்றபோது, திருச்சி நோக்கி வேகமாகச் சென்ற, 'ஸ்விப்ட்' கார் பைக் மீது மோதியது. இதில், தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இருவரின் உடலையும் கைப்பற்றிய விக்கிரவாண்டி போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி