மேலும் செய்திகள்
மனைவி பிரிந்த சோகம் கணவர் தற்கொலை
07-Mar-2025
விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி அலுவலக தற்காலிக பெண் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.விழுப்புரம் பூந்தோட்டத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகள் கோமதி,23; பி.ஏ., பட்டதாரியான இவர், விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில், கடந்த சில மாதங்களாக தற்காலிக அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2024ம் ஆண்டு, கோமதியின் வயிற்றில், நீர்கட்டி பாதிப்பு இருந்ததால், அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர். அதிலிருந்து, கடும் வயிற்று வலியாலும், அவரது தாயாரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே இருந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட கோமதி, நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விழுப்புரம் மேற்கு போலீசார், அவரது உடலை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
07-Mar-2025