உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அவலுார்பேட்டையில் படத்திறப்பு நிகழ்ச்சி

அவலுார்பேட்டையில் படத்திறப்பு நிகழ்ச்சி

செஞ்சி : ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமநாதன் படத்தை மஸ்தான் எம்.எல்.ஏ., திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.செஞ்சி அடுத்த அவலுார்பேட்டையை சேர்ந்த தி.மு.க., மாவட்ட தொழில்நுட்ப அணி நிர்வாகி இராமசரவணனின் தந்தை ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமநாதன் கடந்த மாதம் 22ம் தேதி மறைந்தார். இவரது படத்திறப்பு, அஞ்சலி செலுத்துதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அவலுார்பேட்டையில் நடந்தது. தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் சேகர் தலைமை தாங்கினார்.மேல்மலையனுார் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். ராமசரவணன் வரவேற்றார். மறைந்த ஆசிரியர் இராமநாதன் படத்தை மஸ்தான் எம்.எல்.ஏ., திறந்து வைத்து, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.ஆரணி தொகுதி எம்.பி., தரணிவேந்தன், எம்.எல்.ஏ.,க்கள் விழுப்புரம் டாக்டர் லட்சுமணன், திருப்போரூர் பாலாஜி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய சேர்மன்கள் மேல்மலையனூர் கண்மணி நெடுஞ்செழியன், செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா ரவிக்குமார், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் சாந்தி சுப்பிரமணியன், நாராயணமூர்த்தி, துணை சேர்மேன் விஜயலட்சுமி முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.மாவட்ட கவுன்சிலர் செல்வி ராமசரவணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !