மேலும் செய்திகள்
மின் கசிவால் கூரை வீடு எரிந்து நாசம்
15-Sep-2024
விக்கிரவாண்டி:மதுரையிலிருந்து நேற்று முன்தினம் இரவு பார்சல்களை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு கன்டெய்னர் லாரி புறப்பட்டது. லாரியை மதுரை, களிமங்கலத்தை சேர்ந்த அயூப்கான், 61, ஓட்டினார். நேற்று அதிகாலை, 5:00 மணியளவில் விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி, வராக நதி ஆற்றுப்பாலத்தில் சென்றபோது லாரியில் இருந்து புகை வந்ததால், அதிர்ச்சியடைந்த டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்தினார்.கன்டெய்னரை திறந்து பார்த்த போது லாரிக்குள் பார்சல்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். விபத்தில் லாரியில் இருந்த உணவு பொருட்கள், துணி, இருசக்கர வாகனம், எலக்ட்ரானிக் மற்றும் ஆட்டோமொபைல் பொருட்கள் என, 5 லட்சம் ரூபாய் பொருட்கள் சேதமாகின. பார்சல் பைக்கிலிருந்த பெட்ரோல் கசிவின் காரணமாக தீப்பற்றி எரிந்தது தெரிய வந்தது. விக்கிரவாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Sep-2024