ஸ்கூட்டியில் புகுந்த பாம்பு தீயணைப்பு துறையினர் மீட்பு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் ஸ்கூட்டியில் புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். போட்டோகிராபர். இவர் நேற்று காலை தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பினார். சில நிமிடத்தில் வெளியில் செல்ல புறப்பட்டபோது, ஸ்கூட்டரில் பாம்பு இருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரவாண்டி தீயணைப்பு துறையினர் மெக்கானிக் உதவியோடு ஸ்கூட்டியில் சில உதிரிபாகங்களை கழற்றி, அதில் இருந்த 6 அடி நீள கொம்பேறி மூக்கன் பாம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.