உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  தீயணைப்பு வீரர்களுக்கு தேனீக்களை அகற்ற பயிற்சி

 தீயணைப்பு வீரர்களுக்கு தேனீக்களை அகற்ற பயிற்சி

விழுப்புரம்: விழுப்புரம் மண்டல தீயணைப்புத்துறை சார்பில், 5 மாவட்ட தீயணைப்பு பணியாளர்களுக்கு, தேனீக்களை பாதுகாப்பாக அகற்றுவது குறித்து பயிற்சி முகாம் நடந்தது. விழுப்புரம் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் நடந்த பயிற்சிக்கு மண்டல துணை இயக்குநர் தென்னரசு தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மாவட்ட அலுவலர் பாஸ்கரன், உதவி அலுவலர்கள் செந்தில்குமரன், ஜெயசங்கர், விழுப்புரம் நிலைய அலுவலர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு பயிற்றுனர் சுதந்திரசெல்வன், தேனீக்களை பத்திரமாக அகற்றுவது குறித்து செயல் விளக்கங்களுடன் பயிற்சி அளித்தார். விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி