மீனவர்கள் மீன் பிடிக்க தடை
மரக்காணம் : மரக்காணத்தில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க வருவாய்த் துறை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள எக்கியர்குப்பம், அனுமந்தைகுப்பம், கூனிமேடுகுப்பம், நடுக்குப்பம், தந்திராயன்குப்பம் உட்பட 19 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன் பிடிக்க கூடாது.மேலும் கடற்கரை ஓரம் உள்ள படகு, வலை மற்றும் மீன் பிடி சாதனங்களை மேடான பகுதியில் பாதுகாப்பாக வைக்கவேண்டும். கடல் அலையின் சீற்றம் அதிகமாக உள்ளதால் கடலில் உள்ளூர் மற்றும் சுற்றுலாபயணிகள் குளிக்கக் கூடாது. மறு உத்தரவு வரும் வரை யாரும் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க கூடாது என வருவாய்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.