மேலும் செய்திகள்
வெள்ள நிவாரணம் எம்.எல்.ஏ., வழங்கல்
13-Dec-2024
செஞ்சி : வல்லம் ஒன்றியத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மேல் சித்தாமூர், களையூர், கடம்பூர், நாட்டார்மங்கலம், ராஜாம்புலியூர், குறிஞ்சிப்பை, ஊராட்சிகளில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கி புயல், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் 2000 ரூபாய், அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை, இளம்வழுதி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள் தமிழ்மணி, சரவணன், அமைப்பு சாரா தொழிலாளர் அணி அமைப்பாளர் தமிழரசன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
13-Dec-2024