வெள்ள மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி
விழுப்புரம்; மாவட்ட தீயணைப்பு துறை சார்பில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடாக, நீர் நிலைகளில் மீட்பு பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, நேரடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் தலைமையில் உதவி மாவட்ட அலுவலர்கள் ஜெய்சங்கர், ஜமுனா ராணி, நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் மற்றும் விழுப்புரம், விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய பணியாளர்கள் சார்பில் வடகிழக்கு பருவமழை மீட்பு ஒத்திகை நிகழ்வு வீடூர் அணையில் நடந்தது. தீயணைப்பு அலுவலர்கள், வீரர்கள், தீ தடுப்பு தன்னார்வலர்கள் குழுவினர்கள் இணைந்து, நீர் நிலைகளில் மூழ்கியவர்களை மீட்பது, வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது, மிதவைகளை பயன்படுத்துவது, முதலுதவி அளிப்பது, மருத்துவமனைகளுக்கு அனுப்புவது குறித்து விளக்கினர். இந்நிகழ்வில், வீடூர் அரசுப் பள்ளி மாணவர்கள், சித்தணி இ.எஸ்.நர்சிங் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.