அரசு இசைப் பள்ளியில் நாட்டுப்புற நிகழ்ச்சி
விழுப்புரம்: தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில், கலை உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.விழுப்புரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ஈஸ்வரன் பட்டதிரி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி மையம் சார்பில் இசைக் கருவிகள், கலை உபகரணங்களை வழங்கினார்.முன்னதாக, தெருக்கூத்து, மல்லர் கம்பம், பறை இசை, பம்பை உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடந்தது.இதில், பயிற்சி ஆசிரியர்கள் ஏழுமலை, ஜனார்த்தனன், அன்பரசன், செந்தில்குமார் மற்றும் பயிற்சி மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.