மேலும் செய்திகள்
9 கிலோ குட்கா பறிமுதல் வியாபாரி கைது
28-Sep-2024
மயிலம்: மயிலத்தில் ஊராட்சி அளவிலான சிறு தானிய உணவு திருவிழா நடந்தது.பெண்கள் சுய உதவிக் குழு சார்பில் நடந்த விழாவிற்கு, மயிலம் ஊராட்சி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் சங்கர் வரவேற்றார்.பெண்கள் குழுவை சேர்ந்த பிருந்தா, புவனேஸ்வரி, பாக்கியலட்சுமி, இந்துமதி துவக்க உரையாற்றினர்.விழாவில் பங்கேற்ற மருதம், மயிலம் 18 ஆகிய குழுவினர் முதல் இடத்தைப் பிடித்தனர். மகிழம்பூ, மகாத்மாவின் காந்தி ஆகிய குழுவினர் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு ஊராட்சி சார்பில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
28-Sep-2024