உணவுப் பயணம் விளக்க நிகழ்ச்சி
வானுார், : வானுார் அடுத்த டி.பரங்கனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உணவுப் பயணம் குறித்த விளக்க நிகழ்ச்சி நடந்தது.ஆரோவில் பிச்சாண்டிக்குளம், நடுக்குப்பம் சுற்றுச்சூழல் அமைப்பின் உதவியுடன் மாவட்டத்தில் முன்மாதிரி சோதனை திட்டமாக விந்தை விழுதுகள் செயல் திட்டம் நடந்து வருகிறது.இதன் தொடர் செயல்பாடுகளின் 7வது செயல்திட்டமாக 'உணவுப் பயணம்' விளக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த நிகழ்ச்சி நடந்தது.இதில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய காய்கறி, பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களையும், நாம் பிற மாநிலங்களுக்கு அனுப்பக்கூடிய உணவுப்பொருட்களின் விபரங்கள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.மாணவர்கள் அதனை அறிந்து தரையில் இந்தியா வரைபடத்தினை வரைந்து, வண்ணமிட்டு செயல்பாடுகளின் மூலம் செய்து காட்டினர். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் ஆசிரியர் இளங்கோவன், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர் ஹேமலதா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.