உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் கால்பந்து போட்டி; வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

விழுப்புரத்தில் கால்பந்து போட்டி; வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

விழுப்புரம்: விழுப்புரத்தில், 12 வயதுக்கு உட்பட்டோர் கால் பந்து போட்டி நடைபெற்றது.விழுப்புரம் சுதாகர் நகரில் உள்ள டர்ப் டி.என்.32 பயிற்சி மையத்தில், 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கால் பந்து போட்டி நடைபெற்றது. இதில், அப்துல் கலாம் கால்பந்து கழகம், ராமகிருஷ்ணா கால்பந்து கழகம், காணை ஒருங்கிணைந்த கால்பந்து கழகம், மாஸ்டர்ஸ் கால்பந்து கழகம், டர்ப் டி.என்.32 கால்பந்து பயிற்சி மையம், புஷ்பராஜ் கால்பந்து கழகம், கண்டாச்சிபுரம் கால்பந்து கழகம் ஆகிய அணிகள் பங்கேற்றன. ஒருங்கிணைப்பாளர்கள் பயிற்சியாளர் பாஷித் அகமது, பிரசன்னா, கோபி, ஸ்வரூப் ஆகியோர் போட்டிகளை நடத்தினர்.போட்டியில், டர்ப் டி.என்.32 கால்பந்து பயிற்சி மைய அணி முதலிடத்தையும், ராமகிருஷ்ணா கால்பந்து கழக அணி இரண்டாம் இடத்தையும், காணை ஒருங்கிணைந்த கால்பந்து கழக அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன. சிறந்த ஆட்டக்காரர் தருண் கிருத்திக், அதிக கோல் அடித்த வீரர் ஹரிஷ், சிறந்த கோல் கீப்பராக புகழ்வேல் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !