செஞ்சி அ.தி.மு.க., பிரமுகர் மாணிக்கம் இல்ல திருமணம் முன்னாள் அமைச்சர் சண்முகம் நேரில் வாழ்த்து
செஞ்சி: செஞ்சி அ.தி.மு.க., பிரமுகர் எம்.கே.மாணிக்கம் இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் சண்முகம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் மணமக்களை வாழ்த்தினர். செஞ்சியை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர், எஸ்கார்ட்ஸ் டிராக்டர் டீலர், கவுதம் ஏஜன்சீஸ் உரிமையாளர், எம்.கே.எம்., புளு மெட்டல், எம்.கே.எம்., கன்ஸ்ட்ரக்ஷன், தமிழ்நாடு புதுச்சேரி அரசு ஒப்பந்ததாரர் எம்.கே.மாணிக்கம்- மலர் மாணிக்கம் இவர்களின் மகள் டாக்டர் கவுசல்யாவிற்கும், போளூர் தொழில் அதிபர் மூர்த்தி--மாலதி தம்பதியரின் மகன் டாக்டர் அரவிந்தன் ஆகியோருக்கும் திருவண்ணாமலை ஆண்டாள் சிங்காரவேலு மண்டபத்தில் திருமணம் நடந்தது. மணமக்களை வாழ்த்தி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சார்பில் மாலைகள் அணிவித்து, பிரசாதம் மற்றும் சுவாமியின் படம் வழங்கினர். முன்னாள் அமைச்சர் சண்முகம் எம்.பி., நியூஸ் ஜெ., இயக்குனர் ராதாகிருஷ்ணன், தமிழக துணை சபாநாயகர் பிச்சாண்டி, புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், பாஸ்கர் எம்.எல்.ஏ., திருவண்ணாமலை எம்.பி., அண்ணாதுரை, முன்னாள் எம்.பி., செஞ்சி சேவல் ஏழுமலை, போளூர் தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் டாக்டர் கம்பன், முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.சி.சம்பத், சேவூர் ராமச்சந்திரன், புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை செயற்பொறியாளர் வீரசெல்வன், விழுப்புரம் நகர செயலாளர்கள் விழுப்புரம் பசுபதி, திண்டிவனம் தீனதயாளன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் செஞ்சி கோவிந்தசாமி, சோழன், மேல்மலையனுார் புண்ணியமூர்த்தி, பாலகிருஷ்ணன், வல்லம் நடராஜன், மாவட்ட இணை செயலாளர் ஆனந்தி அண்ணாதுரை, இளைஞரணி மாவட்ட செயலாளர் பிரித்விராஜ், வழக்கறிஞர் அணி, வேலவன், அருண்தத்தன், தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் கதிரவன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், விஜயன், சேகர், சதீஷ், சந்தோஷ், வசந்தவேலு, பக்தவச்சலம் மற்றும் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மணமக்களின் பெற்றோர் மாணிக்கம்-மலர், மூர்த்தி-மாலதி, கவுதம் மாணிக்கம் ஆகியோர் வரவேற்றனர்.