மேலும் செய்திகள்
அமித்ஷாவுக்கு எதிராக தி.மு.க., ஆர்ப்பாட்டம்
20-Dec-2024
செஞ்சி : விபத்தில் சிக்கி 11 ஆண்டுகளாக கோமாவில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ., தமிழ்மொழி ராஜதத்தன் நேற்று காலை உயிரிழந்தார்.விழுப்புரம் மாவட்டத்தில் தொகுதி மறு சீரமைப்பில் நீக்கப்பட்ட மேல்மலையனுார் சட்டசபை தொகுதியில், 2001 முதல் 2006 வரை எம்.எல்.ஏ.,வாகவும், அ.தி.மு.க., மகளிரணி விழுப்புரம் மாவட்ட செயலாளராகவும் இருந்தவர் தமிழ்மொழி ராஜதத்தன், 64;இவர், கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னைக்கு காரில் சென்றபோது, செங்கல்பட்டு அருகே நடந்த சாலை விபத்தில் தலையின் பின் பகுதியில் பலத்த அடிபட்டு, சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்றார்.கடந்த 11 ஆண்டுகளாக சென்னையில் உள்ள வீட்டில் தொடர் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று காலை 6:00 மணிக்கு சுயநினைவு திரும்பாமல் இறந்தார்.அவரது உடல் நேற்று மாலை சொந்த ஊரான மேல்மலையனுார் அடுத்த எய்யில் கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது.அவரது உடலுக்கு அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் விழுப்புரம் சண்முகம், திருவண்ணாமலை மோகன், மஸ்தான் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் புண்ணியமூர்த்தி, பாலகிருஷணன், கோவிந்தசாமி, சோழன், விநாயகமூர்த்தி, நடராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.இறந்த தமிழ்மொழிக்கு, ராஜதத்தன் என்ற கணவர், சுமித்ரா என்ற மகளும், பிரேம் தத்தன், அருண்தத்தன் என்கிற மகன்கள் உள்ளனர்.
20-Dec-2024