மேலும் செய்திகள்
தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் அசைவ விருந்து
07-Nov-2024
வாகன ஓட்டிக்கு நெஞ்சு வலி போலீஸ் மீட்பு
07-Nov-2024
விழுப்புரம் : விழுப்புரம் அருகே சாலை விபத்தில் சிக்கியவருக்கு, தி.மு.க., மாஜி எம்.பி., முதலுதவி அளித்தார். விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் டாக்டர் கவுதமசிகாமணி. முன்னாள் எம்.பி., இவர், கோலியனுார் நோக்கி நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது விழுப்புரத்திலிருந்து, சாலைஅகரம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற நபர் மீது வாகனம் மோதி, ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். இதனை கவனித்த கவுதமசிகாமணி, தனது காரை நிறுத்தி, படுகாயமடைந்த நபரை பரிசோதனை செய்தார். பின், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு மொபைல் மூலம் தகவல் அளித்தார். இதற்கிடையே அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். இதையடுத்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை பார்த்த பொதுமக்கள், உறவினர்கள் கவுதமசிகாமணியின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
07-Nov-2024
07-Nov-2024