இரு விபத்துகளில் நான்கு பேர் பரிதாப பலி
கண்டாச்சிபுரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தை சேர்ந்தவர்கள் மணி, 30, குமார், 35, கார்த்தி, 35; விவசாய கூலி தொழிலாளர்களான மூவரும், நேற்று மாலை வேலை முடிந்து, 'பல்சர்' பைக்கில் வேட்டவலத்தில் இருந்து கண்டாச்சிபுரம் நோக்கி வந்தனர்.பைக்கை மணி ஓட்டினார். கண்டாச்சிபுரம் அடுத்த அடுக்கம் கிராமம் அருகே வந்தபோது, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற, 'கியா' கார், பைக் மீது மோதியதில் மணி, குமார் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கார்த்தி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கண்டாச்சிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். மேற்கு வங்க மாநிலம், கல்மாவை சேர்ந்தவர் சுபல்ராணா, 54. கடலுார் மாவட்டம், ஆரூரான் சர்க்கரை ஆலையில் தங்கி பணிபுரிந்தார். நேற்று முன்தினம் மாலை ஆலை எதிரே சேலம் - கடலுார் சாலையை கடக்க முயன்றார். அவ்வழியே வந்த, 'பல்சர்' பைக், சுபல்ராணா மீது மோதியதில், சுபல்ராணா, 54, பைக்கை ஓட்டி வந்த வேப்பூர் அலெக்ஸ்பாண்டியன், 18, உயிரிழந்தனர். வேப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.