மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவி தி.மு.க., வழங்கல்
28-Nov-2025
மயிலம்: மயிலம் அடுத்த அவ்வையார்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடந்த விழாவிற்கு, மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கி பேசினார். மயிலம் சேர்மன் யோகேஸ்வரி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் கதிரவன் வரவேற்றார். விழாவில், வடக்கு மாவட்ட தி.மு.க., அவைத் தலைவர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், ஒன்றிய செயலாளர் மணிமாறன், தீர்மான குழு உறுப்பினர் சிவா, வந்தவாசி தொகுதி பொறுப்பாளர் செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் பிரகாஷ், சேகர், வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சம்சுதீன், ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விவசாய அணி பாஸ்கர், கவுன்சிலர் ஜெயந்தி, ஊராட்சி தலைவர் மகாலட்சுமி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
28-Nov-2025