உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இலவச மனைப்பட்டா இடம் கலெக்டர் நேரில் ஆய்வு

இலவச மனைப்பட்டா இடம் கலெக்டர் நேரில் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பழங்குடி இருளர் மக்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.விழுப்புரம் அருகே கோலியனுார் ஒன்றியம் பில்லுார் கிராமத்தில், பழங்குடி இருளர் மக்களுக்கு, அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட உள்ளது. இதற்காக பில்லுார் கிராமத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை கலெக்டர் ஷேக்அப்துல்ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அங்கிருந்த இருளர் பழங்குடியின மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். விரைவில் இடம் உறுதி செய்யப்பட்டு, இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் பத்மஜா, பி.டி.ஓ.,க்கள் கார்த்திகேயன், தேவதாஸ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை