மேலும் செய்திகள்
மருத்துவர்களுக்கான கருத்தரங்கம்
10-Apr-2025
விழுப்புரம்: இந்திய மருத்துவ சங்கம் விழுப்புரம் கிளை மற்றும் தென்மண்டல காது, மூக்கு, தொண்டை, அலர்ஜி, ஆஸ்துமா ஆராய்ச்சி மையம் சார்பில், ஆஸ்துமா விழிப்புணர்வு மற்றும் இலவச நுரையீரல் பரிசோதனை முகாம் நடந்தது. விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே வி.ஜி.பி., நகரில் உள்ள டாக்டர் வெற்றிவேல் மருத்துவமனையில் நடந்த முகாமை, இந்திய மருத்துவ சங்க விழுப்புரம் கிளை தலைவர் கோவிந்தராஜூலு தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மாநில நர்சிங் போர்டு பொருளாளர் திருமாவளவன், விழுப்புரம் மாவட்ட காசநோய் தடுப்பு துணை இயக்குனர் சுதாகர், இந்திய மருத்துவ சங்கம் செயலாளர் தங்கராசு ஆகியோர் நோய்கள் சம்பந்தமான கருத்துக்களை கூறினர். தொடர்ந்து, தென்மண்டல காது, மூக்கு, தொண்டை, அலர்ஜி, ஆஸ்துமா மையம் நிறுவனர் வெற்றிவேல், தலைமையில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு நுரையீரல் பரிசோதனை மற்றும் ஆஸ்துமா அலர்ஜி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த இலவச பரிசோதனை முகாம் தினந்தோறும் இங்கு காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடக்கிறது. டாக்டர்கள் சரவணராஜா, கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
10-Apr-2025