மேலும் செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
21-Jul-2025
இலவச பல்துறை மருத்துவ முகாம்
15-Jul-2025
வானுார் : ஆரோவில் கிராம செயல்வழிக்குழு மற்றும் பிம்ஸ் மருத்துவமனையும் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் காட்ராம்பாக்கம் கிராமத்தில் நடந்தது.முகாமை, ஆரோவில் கிராம செயல்வழிக்குழு திட்ட இயக்குநர் ஜெரால்டு மோரீஸ் தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசினார். காட்ராம்பாக்கம் ஊராட்சி தலைவர் வில்வமணி முன்னிலை வகித்தார். முகாமில் டாக்டர்கள் அபிேஷக், ரதிஸ்ரீ, முத்தாலு, கபிலன் ஆகியோர் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கினர்.முகாமில், 200க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்தனர். ஏற்பாடுகளை பிம்ஸ் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் துரைசாமி செய்திருந்தார்.
21-Jul-2025
15-Jul-2025