உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காற்றில் பரவும் சிறிய பூச்சிகளை கட்டுப்படுத்த புகை மருந்து

காற்றில் பரவும் சிறிய பூச்சிகளை கட்டுப்படுத்த புகை மருந்து

செஞ்சி : செஞ்சியில் காற்றில் பரவும் சிறிய பூச்சிகளை கட்டுப்படுத்த பேரூராட்சி சார்பில் புகை மருந்து அடித்தனர். செஞ்சியில், திருவண்ணாமலை சாலையில் கடந்த ஆண்டு பருவ மழை துவங்கிய போது, கண்களுக்கு சரிவர புலப்படாத மிக நுண்ணிய வெள்ளை நிற பூச்சிகள் காற்றில் மிதந்து பரவியது. இது குறித்து அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. எந்த ஆய்வும், நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. சில நாட்களில் பூச்சிகள் தானாகவே மறைந்து போயின. இந்த ஆண்டும் கடந்த சில நாட்களாக இந்த பூச்சிகள் காற்றில் பரவி இருந்தன. இதையடுத்து, பூச்சிகளால் மக்கள் அச்சமடைந்து வருவதாக செய்தி பரவியது. இந்நிலையில், நேற்று முன்தினம் செஞ்சி பேரூராட்சி சார்பில் கொசுக்களை கட்டுப்படுத்த அடிக்கப்படும் புகை மருந்தை திருவண்ணாமலை சாலையில் அடித்தனர். இதன் மூலம் காற்றில் பரவும் பூச்சிகள் கட்டுக்குள் வருமா என்பது இனி வரும் நாட்களில் தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை