உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்

திண்டிவனம்; திண்டிவனத்தில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, சப் கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். தாசில்தார் யுவராஜ், திண்டிவனம், செஞ்சி கோட்ட டி.எஸ்.பி.,க்கள், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனுார் தாசில்தார்கள், திண்டிவனம் தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் மின்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், விநாயகர் சிலை அமைப்பு குழுவினர் பங்கேற்றனர். கூட்டத்தில் விநாயகர் சிலை நிறுவ உள்ள இடத்திற்கும், தீயணைப்பு நிலையத்திடமும் தடையில்லா சான்று பெற வேண்டும். விநாயகர் சிலை களிமண்ணால் செய்திருக்க வேண்டும். சிலைகள் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. சிலை வைத்த இடங்களில் காலை 2:00 மணி நேரமும், மாலை 2:00 மணி நேரம் மட்டுமே ஒலி பெருக்கி பயன்படுத்த வேண்டும். சிலை வைத்த நாளிலிருந்து 5 நாட்களுக்குள் சிலைகளை கடலில் கரைத்துவிட வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை