மேலும் செய்திகள்
நிலத்தடி நீர் ஆதாரம் குறித்து ஆலோசனை கூட்டம்
24-Sep-2024
செஞ்சி: செஞ்சி நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் 30 ஆண்டுகளாக தேசிய நெடுஞ்சாலையிலும், ஆற்றிலும் கொட்டி எரித்து வரும் அவலம் நீடித்து வருகிறது.செஞ்சி நகரில் நாள் ஒன்றுக்கு 8 முதல் 12 டன் வரை குப்பைகள் சேர்கின்றன. இந்த குப்பைகளை உரமாக்கவும், எரிக்கவும் பேரூராட்சிக்கு போதிய இடம் இல்லை. தற்போதுள்ள வளமீட்பு பூங்காவில் நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 டன் குட்பைகளை மட்டுமே கையாள முடியும்.மீதம் உள்ள குப்பைகளை திண்டிவனம் சாலையில் சங்கராபரணி ஆற்றிலும், தேசிய நெடுஞ்சாலையோரத்திலம் கொட்டி எரித்து வருகின்றனர்.சங்கராபரணி ஆற்றில் தினமும் பல டன் குப்பைகளை கொட்டி எரிக்கும் போது, பாதியளவு குப்பைகள் கூட முழுமையாக எரிவதில்லை. மீதம் உள்ள குப்பைகள் அதே இடத்தில் பல நாட்கள் இருக்கும். ஈர குப்பையும், காய்கனிகளும், இறைச்சி கழிவுகளும் அழுகி கடும் துர்நாற்றம் வீசுகிறது.பல நாட்கள் அதே இடத்தில் இருக்கும் ஈர குப்பைகளில் இருந்து கருப்பு நிறத்தில் திரவம் வெளியேறி ஆற்று நீரில் கலந்து ஆற்றில் உள்ள குட்டைகள் முழுவதும் அசுத்தமான நீர் நிரம்பி மாசடைகிறது.செஞ்சியில் இருந்து வீடூர் அணைக்குச் செல்லும் சங்கராபரணி ஆறுடன், தொண்டியாறும் இணைகிறது. சங்கராபரணி ஆறு செல்லும் வழிகளில் உள்ள 15க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இதில் இருந்து குடிநீர் எடுக்கின்றனர். ஆற்று நீர் மாசடைந்து விட்டதால் இதில் இருந்து கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தும் கிராம மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. ஒரு பக்கம் சங்கராபரணி ஆறு மாசடைந்து வரும் அதே நேரத்தில் குப்பையின் ஒரு பகுதியை செஞ்சி தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டி எரிக்கின்றனர். அதிகாலையில் இதில் இருந்து வரும் திடமான புகையில் எதிரில் வரும் வாகனங்கள் பார்வையில் தெரியாமல் பல முறை இரு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர். மேலும் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறலுக்கு ஆளாகின்றனர்.தற்போது செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க உள்ள நிலையில் பாரம்பரியம் மிக்க புரதான நகரமான செஞ்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பையை கையாள்வதற்கு நிரந்தர தீர்வு காணாமல் இருப்பது செஞ்சி நகர மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் கவனம் செலுத்தி குப்பை பிச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
24-Sep-2024