உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயில் நிலையத்தில் பொதுமேலாளர் ஆய்வு

ரயில் நிலையத்தில் பொதுமேலாளர் ஆய்வு

விழுப்புரம் : ரயில் நிலைய கட்டுமான பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு செய்தார். விழுப்புரம் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் நேற்று ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள், பயணச்சீட்டு மைய கட்டுமான பணிகளை பார்வையிட்டார். பயணச்சீட்டு மையம் அருகில் நடந்து வரும் நடைமேடை பால வசதியுடன் எக்ஸலேட்டர் அமைக்கும் பணியை பார்வையிட்டு, விரைந்து முடிக்க உத்தரவிட்டார். ரயில் நிலைய பூங்காவை செயற்கை நீருற்றுடன் நவீனப்படுத்தி பராமரிக்கவும், பார்சல் சர்வீஸ் அலுவலக கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு திறக்கவும், அறிவுறுத்தினார். தொடர்ந்து, அனைத்து நடைமேடைகளிலும் சுகாதாரமான குடிநீர், மின்விசிறி, இருக்கைகள், கழிவறை உள்ளிட்ட பயணிகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தவும், சி.சி.டி.வி., கேமரா பொருத்தும் பணிகளை விரைந்து துவக்கவும் உத்தரவிட்டார். அப்போது, கோட்ட ரயில்வே மேலாளர் ஸ்ரீபாலக் ராம்நெகி, முதன்மை திட்ட மேலாளர் சந்திரசேகரன், முதன்மை கோட்டப்பொறியாளர் நந்தலால் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி