உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாறை சிதறி சிறுமி பலி; முதல்வர் நிவாரணம்

பாறை சிதறி சிறுமி பலி; முதல்வர் நிவாரணம்

விக்கிரவாண்டி; பாறை சிதறிய விபத்தில் உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு, 3 லட்சம் ரூபாய், நிவாரணம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த திருக்குணம் மதுரா கொசப்பாளையம் கிராமத்தில், 23ம் தேதி நடந்த, வாய்க்கால் பராமரிப்பு பணியின்போது, அங்கிருந்த பாறையை வெடி வைத்து தகர்த்துள்ளனர். அப்போது, சிதறிய கல், அருகில் விவசாய நிலத்தில், ஆடு மேய்த்து கொண்டிருந்த, சிறுமி காயத்ரி,10, தலையில் விழுந்துள்ளது. பலத்த காயமடைந்த சிறுமி, அதே இடத்தில் இறந்தார்.இதை அறிந்த முதல்வர், அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அத்துடன், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த கஞ்சனுார் போலீசார், பாறையை வெடிவைத்து தகர்த்த சங்கரை கைது செய்தனர். ஊராட்சி தலைவர் பிரகாஷிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி