உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பஸ் கண்டக்டர் இறப்பு

அரசு பஸ் கண்டக்டர் இறப்பு

மயிலம்: அரசு பஸ் கண்டக்டர் பணியின் போது மயக்கமடைந்து இறந்தார்.திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியை சேர்ந்தவர் அசோகன், 56; தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி சென்னையிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்ஸில் பணியில் இருந்துள்ளார். மயிலம் அருகே அரசு பஸ் வரும்பொழுது கண்டக்டர் திடீரென மயக்கம் மடைந்து கீழே விழுந்துள்ளார். உடனே அவரை பணியில் இருந்த டிரைவர் சுரேஷ்பாபு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்து விட்டார். இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை