உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விக்கிரவாண்டி தொகுதியில் அரசு பஸ் சேவை துவக்கம் 

விக்கிரவாண்டி தொகுதியில் அரசு பஸ் சேவை துவக்கம் 

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில், 3 புறநகர் பஸ் உட்பட, 8 புதிய அரசு பஸ் சேவை துவங்கப்பட்டது. விக்கிரவாண்டி தொகுதி, பனமலைபேட்டையிலிருந்து அடையார்; அடையாறில் இருந்து பனமலை பேட்டை; மற்றும் பனமலை பேட்டையில் இருந்து விழுப்புரம் பைபாஸ் வழியாக புதுச்சேரி ஆகிய மூன்று வழித்தடங்களில், புறநகர் பஸ் சேவை நேற்று துவங்கியது. அதேபோல, தொரவி தாங்கலிலிருந்து விழுப்புரம்; வெங்கமூரிலிருந்து விழுப்புரம்; விழுப்புரத்திலிருந்து அன்னியூர் அரசு கலைக்கல்லுாரி வழியாக திருக்குணம்; விழுப்புரத்தில் இருந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை; விழுப்புரத்திலிருந்து அன்னியூர் அரசு கலைக்கல்லுாரி வழியாக, பனமலைப்பேட்டை; ஆகிய 5 வழித்தடங்களில், அரசு டவுன் பஸ் சேவை துவங்கப்பட்டது. மொத்தம், 8 புதிய பஸ்களை விக்கிரவாண்டி தொகுதியில் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., கொடியசைத்து துவக்கி வைத்தார்.போக்குவரத்து கழக விழுப்புரம் பொது மேலாளர் ஜெயச்சங்கர், துணை மேலாளர் சிவக்குமார், கிளை மேலாளர் முருகன், மருத்துவக்கல்லுாரி ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் பார்த்தசாரதி, ஒன்றிய சேர்மன்கள் சங்கீத அரசி ரவிதுரை, கலைச்செல்வி, திட்டக் குழு முருகன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயபால், கல்பட்டு ராஜா, முருகன், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், மாநில மகளிர் அணி பிரச்சாரகுழு அமைப்பாளர் தேன்மொழி,ஒன்றிய கவுன்சிலர்கள் இளவரசி, சாவித்திரி, செல்வம், ஒன்றிய தலைவர் முரளி, ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுந்தர், ஊராட்சி மன்ற தலைவர் விசாலாட்சி வேலு, மாவட்ட பிரதிநிதிகள் சுதாகர், ராம்குமார் ,சங்கர் ,விஜயவேலன்,அரசு வழக்கறிஞர் சிவா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி