மேலும் செய்திகள்
ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்க மாநாடு
11-Nov-2024
விழுப்புரம்: தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிங்காரம் தலைமை தாங்கினார். மத்திய செயற்குழு உறுப்பினர் சதீஷ், மாவட்ட துணைத் தலைவர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.மாநில துணை பொதுச்செயலாளர் டேவிட்குணசீலன், முன்னாள் மாநில தலைவர் செல்வராஜ், ஊரக வளர்ச்சித்துறை சங்க ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் மற்றும் சிவகுரு, அருணகிரி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும். 'விசாகா' கமிட்டி முறையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும், சத்துணவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 6,000 ரூபாய் வழங்குவதுடன், 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக, மாவட்ட தலைவர் சிங்காரத்திற்கு, பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.மாவட்ட நிர்வாகிகள் மணிகண்டன், முருகன், ராஜேந்திரன், மருதமலை, குணசேகரன், பூமாரி உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் குமரவேல் நன்றி கூறினார்.
11-Nov-2024