உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதல்வர் கோப்பை பேட்மின்டன் அரசு மகளிர் பள்ளி முதலிடம்

முதல்வர் கோப்பை பேட்மின்டன் அரசு மகளிர் பள்ளி முதலிடம்

விழுப்புரம்: முதல்வர் கோப்பைக்கான பேட்மின்டன் போட்டியில் விழுப்புரம் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர். விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி, கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் தொடங்கி வைத்தார். மாவட்ட இறகுபந்தாட்ட கழக பயிற்சியாளர் பாபு உள்ளிட்ட குழுவினர் ஒருங்கிணைத்தனர். பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், பொது பிரிவினர், அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் என தனித்தனியாக 8 நாட்கள் போட்டிகள் நடந்தன. இதில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, அனைத்து பிரிவிலும் ஆண்கள் மற்றும் பெண்கள், மாணவ, மாணவிகள் என 1,300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட அளவில் பள்ளிகளுக்கான போட்டியில், மகளிர் பேட்மின்டன் பிரிவில் விழுப்புரம் அரசு மகளிர் பள்ளி மாணவிகள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்தனர். அரசு ஊழியர்களுக்கான பெண்கள் பிரிவில் விழுப்புரம் வன அலுவலர் கார்த்திகேயினி முதலிடத்தையும், இரட்டையர் பிரிவில் அரசு மருத்துவர் தாரணியும் முதலிடத்தை பிடித்தனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள், பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்தவர்கள், சென்னையில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கு பெற உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ