உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பள்ளி மாணவர்கள் தடகளத்தில் அசத்தல்

அரசு பள்ளி மாணவர்கள் தடகளத்தில் அசத்தல்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கோலியனூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் மேல்பாதி மாணவர்கள், வட்டார அளவில் நடந்த தொ டர் ஓட்டம் மற்றும் 400 மீ., ஓட்டம் போட்டிகளில், உடற்கல்வி ஆசிரியர் தாமரை செல்வன் முன்னிலையில் கலந்து கொண்டு சாதனை புரிந்து பரிசுகளை வென்றுள்ளனர். இந்த போட்டியில், மாணவர்கள் சமந்தா, கமலி, கனிஷ்கா, பூஜா, மோனிகா, கீர்த்தனா, மீரா, தேவதர்ஷினி, கோபிகா, சஞ்சய், ஹரிஷ், ஜீவேஷ். முகிலன், சசிதரன், பிரதாப், மோனிஷ், ராம்குமார் திவ்யேஷ், தர்ஷன் ராஜ், இளமாறன் ஆகியோர் வெற்றி பெற்றனர். மாணவர்கள் வெற்றி பெற உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியர் ஷர்மிளா தேவி, மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்தனர். இந்த பள்ளியில் பலரும் விளையாட்டு போட்டிகளில்சிறந்து விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ