பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே பொது தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விக்கிரவாண்டி ஒன்றியம் முண்டியம்பாக்கம் சிந்தாமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா, கொசப்பாளையத்தில் நடந்தது. பா.ம.க .,மாவட்ட துணை தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். முன்னாள் தலைமை ஆசிரியர் பாலகுமாரன், வார்டு உறுப்பினர் பத்மாவதி தமிழ்ச்செல்வன் பெரியசாமி, ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். பள்ளியில் 10ம் வகுப்பில் சிறப்பிடம் பிடித்த சுபிக்ஷா, இலக்கியா, சுனில் ராஜ், நிவேதா, பிளஸ் 1 வகுப்பில் ஹேமச்சந்திரன், ஷோபனா, ரட்சிகா, பிளஸ் 2 தேர்வில் விக்னேஸ்வரன் ,தர்ஷினா, சிவரஞ்சனி ஆகியோருக்கு பா.ம.க., மாவட்ட தலைவர் புகழேந்தி, ஊராட்சி தலைவர் சந்திரசேகர், கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினர். ஒன்றிய அமைப்புச் செயலாளர் ஆறுமுகம் , வார்டு உறுப்பினர் அபிராமி லட்சுமணன், நாகப்பன் ஏழுமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.