அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தினர் தர்ணா
விழுப்புரம் : விழுப்புரத்தில் அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஊதிய உயர்வு கோரிக்கை வலி யுறுத்தி தர்ணா நடந்தது. அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன் நடந்த தர்ணாவிற்கு, மண்டல தலைவர் ராஜாராம் தலைமை வகித்தார். துணைச் செயலாளர்கள் ஏழுமலை, மணி, ஓய்வு பெற்ற நல சங்கம் சின்னராசு, கல்வராயன் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் முருகன் வரவேற்றார். துணை செயலர்கள் வேலு, மணி, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ராமதாஸ், சகாதேவன் ஆகியோர் பேசினர். தர்ணாவில், அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 2003ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தோருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை வழங்க வேண்டும். 23 மாத நிலுவை ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.