உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரி ஆண்டு விளையாட்டு விழா

கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரி ஆண்டு விளையாட்டு விழா

திண்டிவனம்: திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரில் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் நாராயணன் தலைமை தாங்கினார். கணினி அறிவியல் துறைத் தலைவர் கார்குழலி வரவேற்றார். உடற்கல்வி இயக்குநர் சிவராமன் விளையாட்டு விழா ஆண்டறிக்கை வாசித்தார். திண்டிவனம் போக்குவரத்துக் காவல் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், ரோஷணை போலீஸ் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பலராமன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். விழாவில் கல்லுாரியில் இறுதியாண்டு படிக்கும் இளநிலை இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்புப் பணி ஆணை வழங்கப்பட்டது. இயற்பியல் துறைத் தலைவர் லதா நன்றியுரை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ