உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பட்டதாரி பெண் மாயம்

பட்டதாரி பெண் மாயம்

விழுப்புரம்: பட்டதாரி பெண் காணாமல் போனது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர். வளவனுார் அருகே குடுமியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் மகள் இந்துமதி,23; இவர், பயோ கணிதம் பயின்று விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த ஒரு மாதமாக விழுப்புரம் சித்தேரிக்கரையில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அங்கிருந்து நேற்று முன்தினம் வெளியே சென்றவர் மீண்டும் வரவில்லை. அவரை, உறவினர்கள், குடும்பத்தார் பல இடங்களில் தேடியும் காணவில்லை. விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை