மேலும் செய்திகள்
கிராம ஊராட்சிகளில் மே தினத்தில் கிராமசபை
29-Apr-2025
மே1ல் கிராம சபை கூட்டம்
25-Apr-2025
விழுப்புரம்: மாவட்டத்தில் வரும் 1ம் தேதி கிராம சபா கூட்டம் நடக்கிறது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு; விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று, ஊராட்சி தலைவர்களால் கிராம சபா கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் கிராம ஊராட்சி மற்றும் பொது செலவினம் குறித்து விவாதித்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுய சான்றிதழ் அடிப்படையாகக் கொண்டு கட்டட அனுமதி பெறுதல் மற்றும் வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல், குழந்தைகள் பாதுகாப்பு, கிராம ஊராட்சியில் கொத்தடிமை தொழிலாளர் முறை, அனைத்து வகையான தொழில்களில் குழந்தைகள் ஈடுபடுத்துவதில்லை என அறிவித்தல் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை அமைத்தல் தொடர்பான விவரங்கள் கிராம சபாவில் வைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் இந்த கிராம சபாவில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
29-Apr-2025
25-Apr-2025