உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிராவல் கடத்தல் லாரி பறிமுதல்

கிராவல் கடத்தல் லாரி பறிமுதல்

விழுப்புரம்: காணை அருகே அனுமதியின்றி கிராவல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை மண்டல பறக்கும் படை உதவி இயக்குனர் முத்து மற்றும் அலுவலர்கள், நேற்று முன்தினம் காணை பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த வழியே வந்த டிப்பர் லாரியை அதிகாரிகள் நிறுத்தினர். அவர்களை கண்டதும், வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடினார்.லாரியை சோதனை செய்ததில், அதில் உரிய அனுமதியின்றி கிராவல் கடத்தியது தெரியவந்தது. தொடர்ந்து, அதிகாரிகள், கிராவல் மண் மற்றும் லாரியை பறிமுதல் செய்து காணை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வாகன உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ