தாலுகா அலுவலகங்களில் இன்று குறைகேட்பு முகாம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், இன்று அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் வட்ட வழங்கல் அலுவலர்களால், குறைகேட்பு முகாம் நடத்தப்படுகிறது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:முகாம்களில், ரேஷன் கார்டில் பெயர் சேர்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு கோரும் மனுக்களை அளிக்கலாம். மேலும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரச்சான்று கோரும் கோரிக்கை மனு. பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் குறித்தும் மனு வழங்கி தீர்வு காணலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.