உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  குறைகேட்பு கூட்டம் 474 மனுக்கள் குவிந்தன

 குறைகேட்பு கூட்டம் 474 மனுக்கள் குவிந்தன

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 474 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை செய்து உடனடி தீர்வு காண வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில், முதியோர் உதவிதொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா கோருதல் உட்பட 474 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதையடுத்து, வல்லம் ஒன்றியம், தையூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் சிவகங்கை பணி காலத்தில் இறந்ததால், அவரின் குடும்ப வாரிசுதாரரான ராஜேஷ் மனைவி ஜெயசங்கரிக்கு, கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், உதவி கலெக்டர் (பயிற்சி) வெங்கடேஷ்வரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ