உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குறைகேட்பு கூட்டம்: 753 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டம்: 753 மனுக்கள் குவிந்தன

விழுப்புரம் :விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 753 மனுக்கள் பெறப்பட்டது.கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். கூட்டத்தில், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 753 மனுக்கள் பெறப்பட்டது.தாட்கோ சார்பில் முதல்வரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின்கீழ் 23 லட்சத்து 38 ஆயிரத்து 515 ரூபாய் மதிப்பீட்டில், 8 லட்சத்து 18 ஆயிரத்து 480 ரூபாய் மானியத்தில் வாகனத்திற்கான ஆணை வழங்கப்பட்டது.மேலும், மேல்மலையனுார் அடுத்த கோட்டப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி சமையலர் பணியின்போது, இறந்ததால் அவரது வாரிசுதாரருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்.டி.ஆர்.ஓ., அரிதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ