உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கொய்யா வீழ்ச்சி விவசாயிகள் நஷ்டம்

கொய்யா வீழ்ச்சி விவசாயிகள் நஷ்டம்

விழுப்புரம் : கொய்யா பழம் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் ஆனத்துார், கெங்கராம்பாளையம், பம்பாதிரிப்பேட்டை, வெங்கந்துார், ஆரியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் கொய்யா பழம் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தோட்டங்களில் தினந்தோறும் பறிக்கப்படும் கொய்யா பழங்கள் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளின் சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன் 12 கிலோ அடங்கிய கொய்யா பழம் பெட்டி 400 முதல் 500 ரூபாய் வரை விலை போனது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் சந்தைகளில் அதிக அளவில் விவசாயிகள் கொய்யா பழங்களை கொண்டு வருகின்றனர். இதனால், விலை கடும் வீழ்ச்சி அடைந்து 12 கிலோ அடங்கிய பெட்டி 100 முதல் 150 ரூபாய் வரை மட்டுமே விலைபோகிறது. தற்போது விலை சரிந்து விற்பனையாவதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தோட்டத்தில் கொய்யா பழம் பறிப்பதற்கான கூலிக்கு கூட விலை கட்டுபடியாகவில்லை என விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். விலை வீழ்ச்சியால் பழங்களை பறிக்காமல் மரத்திலேயே விட்டு விடுகின்றனர். இதனால், பழங்கள் வீணாகி தோட்டங்களிலேயே கொட்டிக்கிடக்கிறது. மேலும், கொய்யா பழ விவசாயிகள் மற்றும் குத்தகைக்கு எடுத்தவர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக புலம்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ