உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மெய்கண்டார் கோவிலில் குரு பூஜை விழா

மெய்கண்டார் கோவிலில் குரு பூஜை விழா

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் மெய்கண்டார் திருக்கோவிலில் நேற்று குரு பூஜை விழா நடந்தது.அதனையொட்டி நேற்று காலை 9:10 மணியளவில் குருபூஜை வழிபாடு மற்றும் சிறப்பு அபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் சைவத்திரு மகாலிங்கம் சுவாமிகள் தலைமையில் காலை 11:00 மணியளவில் ஆன்மிக சொற்பொழிவு நடந்ததுது.மாலை 6:00 மணியளவில் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாரதனையும், இரவு உற்சவர் மாடவீதி வழியாக வலம் வந்தார்.விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெய்வேலி, விருதாச்சலம், பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியிலிருந்து பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை