மேலும் செய்திகள்
குட்கா விற்றவர் கைது
14-Sep-2024
விழுப்புரம், : விழுப்புரத்தில் குட்கா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார், நேற்று நன்னாடு கிராமத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ், 42; புதுச்சேரி மாநிலம், மடுகரையைச் சேர்ந்த ஆகாஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, மோகன்ராஜை கைது செய்தனர். இவரிடம் இருந்து 43 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
14-Sep-2024