உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  குட்கா கடத்தல் கார் பறிமுதல்

 குட்கா கடத்தல் கார் பறிமுதல்

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஹூண்டாய் வெர்னா கார் முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது கார் டிரைவர் அங்கிருந்து தப்பியோடினார். சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்தபோது அதில் 24 கிலோ குட்கா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையெடுத்து போலீசார் காரை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ