மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் 40 பேருக்கு பணி
25-Sep-2024
விழுப்புரம்: விழுப்புரத்தில் டிசம்பர் 3 இயக்க மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் மாநில செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாநிலத் தலைவர் தீபக் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அவைத் தலைவர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் அண்ணாமலை வரவேற்றார். நிர்வாகிகள் வரதன்பூபதி, மோகன்ராஜ், ஜெயபிரகாஷ், சேக்முகமது, ராஜ்குமார், தமிழரசி, கமல நாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், உள்ளாட்சி பதவிகளுக்கான இடஒதுக்கீட்டில் 5 சதவீதம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கிடவேண்டும்.மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகையை 3,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.மாற்றுத்திறனாளிகளுக்கு 150 நாட்கள், தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
25-Sep-2024